கொழும்பு – கடவத்த பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாமல் மின்கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழுவொன்றை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்தின்போது குறித்த தொழிலாளர்கள் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உயர் மின்னழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் மின்கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துண்டிக்கப்படாத மின்சாரம்
அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

