கொழும்பில் வீதிகளில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
பயணிகளிடம் கைவரிசை காட்டும் பெண்கள்
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் சில காலமாக மக்களுடன் பயணிக்கும் போது அவர்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
கைதான சந்தேக நபர் புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.