கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் பாரியளவிலான ‘குஷ்’ கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஈரானிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான ஈரான் பிரஜையின் வீட்டில் பழுதுபார்ப்பு பணிகளுக்காக சென்ற நபர் ஒருவர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய பிலியந்தலை பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர், தம்மிடம் உள்ள ‘குஷ்’ பங்குக்கான கொள்வனவு செய்பவர்களை கண்டுபிடிக்குமாறும், அதற்கான பணத்தைத் தருமாறும் பழுதுபார்ப்பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பழுதுபார்ப்பவர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இந்தச் சோதனையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிராம் ‘குஷ்’ போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூ. 1.5 மில்லியன் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய ஈரானியர் ஓன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை விநியோகித்ததாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.