கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதி பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் மனித உடலை சேதப்படுத்தக் கூடிய இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை சோதனையிட்ட வளான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் அதன் உரிமையாளர்களையும் கைது செய்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மொத்த விற்பனையின் கீழ் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு கைப்பற்றப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் விசாரணைக்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த அழகுசாதனப் பொருட்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என அச்சிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.