கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலை நிலவியது.
நேற்றையதினம் (20-03-2024) முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பத்திற்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதவேளை, போராட்டக்காரர்களை தாக்கி அவரிகளின் ஆடைகள் களையப்பட்ட அவலமும் நடந்துள்ளது.
மேலும், இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.