கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் “மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்” நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (15) கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த நோய் பாதிப்பு குழந்தைகளின் பல்வேறு உடற்பாகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 2 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு ஏற்படுகிறது.
தற்போது, 6 குழந்தைகள் ரிட்ஜ்வே லேடி குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இது போன்று 78 குழந்தைகளுக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டதாகவும் வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த தெரிவித்தார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 150 குழந்தைகள் இதுவரை சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.