கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,428 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368,111 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,188 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.