முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யாமரத்தில் பழம்பறிக்க ஏறிய தர்மினி கிண்ற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் புதிய கொலணி மாங்குளத்தினை சேர்ந்த 14 அகவையுடைய தயாபரன் தர்மினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் உடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவறிகு அமைய வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் சம்பவம் தொடர்பில் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவியின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது