கொட்டகலையில் குளவிகள் கொட்டியதில் 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த இடத்தில் இருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குளவிகள் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இச்சம்பவத்தில் 11 பெண்கள் உட்பட 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.