யாழ்.இருபாலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை
நீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் காயமடைந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் 34 வயதான மடத்தடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
அதேவேளை அண்ய காலங்களில் யாழில் இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.