ஹங்வெல்ல ஜல்தர அரச வீடமைப்புத் தொகுதியில் குழந்தைகளை பணயக் கைதிகளாகப் பயன்படுத்தி மனைவியைக் கொல்ல வந்த கணவனால் அங்கு ந் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (06) இடம்பெற்ற இச்சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனைவியுடன் முரண்பட்டு கோபமடைந்து துபாயில் பணிபுரிந்த கணவர் , நாடு திரும்பிய பின் ஹன்வெல்ல ஜல்தர பகுதியில் அமைந்துள்ள அரச ஊழியர் வீட்டுத் தொகுதிக்கு பொருட்களை விநியோகிக்கும் கூரியர் நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றுள்ளார்.
இந்நிலையில் மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் வீட்டிற்கு வந்த கணவரை அவதானித்த மனைவி, அவசரமாக குழந்தைகளை அறைக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மனைவி தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த கணவர், தனது 10 வயது மகளையும், 1 வயதும் 8 மாதமுமான மகனையும் பணயக் கைதிகளாகப் பிடித்து, இரண்டு குழந்தைகளுடன் கைக்குண்டை வெடிக்கச் செய்வதாக அயலவர்களை மிரட்டியுள்ளார்.
பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்த பொலிஸார் மிகச்சாதுர்யமாகச் செயற்பட்ட படையினர் 9 மணி நேரத்தின் பின்னர் குழந்தைகளை மீட்டெடுத்ததுடன், கணவரையும் கைது செய்தனர்.