வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த பொலிஸ் உத்தியோத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக் காவலர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தராக இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அருகில் உள்ள காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதான சந்தேக நபரின் கையடக்கத்தொலைபேசியை கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.