தூரத்திலிருந்து ஒருவர் கூப்பிடவுடன், குடுகுடுவென ஓடி வந்து கட்டியணைத்த யானைகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யானைகளின் குறும்புத் தனம்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
கூப்பிடவுடன் ஓடி வந்த யானைகள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் தூரத்திலிருந்து குரல் கொடுத்தவுடன், யானைகளின் கூட்டம் சரசரவென அவரிடம் ஓடி வருகின்றன. ஓடி வந்த யானைகள் அந்த மனிதரிடம் ஏதோ கூறி, அவரை கட்டியணைத்து கத்துகின்றன.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றன.