போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுவின் தலைவருமான குடு அஞ்சு தற்போது பிரான்ஸில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடு அஞ்சு பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து எப்படி மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கை மேற்கொள்கிறார் என ஆராய்வதற்காக பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்மலான குடு அஞ்சு கடந்த 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பணம் தூய்மையாக்கல் என்பது பிரெஞ்சு சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. குடு அஞ்சுவின் இரகசிய காதலி என்று கூறப்படும் பிரெஞ்சு பெண்ணின் பெயரில் பிரான்ஸில் மிகப்பெரிய உணவகம் ஒன்று வாங்கி நடத்தப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரகசிய காதலிக்காக குடு அஞ்சு வாங்கிய குறித்த உணவகம் நமஸ்தே என்ற பெயரில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. நமஸ்தே என்றழைக்கப்படும் இந்த உணவகத்தில் அடிக்கடி விருந்துகள் நடப்பதாகவும், குடு அஞ்சுவும் தனது அழகான பிரெஞ்சு காதலியும் கலந்து கொண்டு நடனம் ஆடுவதாகவும் அந்நாட்டின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரான்ஸ் நாட்டின் போதோ என்ற பகுதியில் வேறு ஒருவரின் பெயரில் வைன் தொழிற்சாலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரான்ஸிற்கு தப்பி சென்று தலைமறைவாக உள்ளபோதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக செயற்பாட்டாளர்களாக கருதப்படும் ஜூட் பிரியந்த மற்றும் பதுவத்த சாமர ஆகியோரும், ரத்மலானை போதைப்பொருள் கடத்தல்காரன் அஞ்சுவின் தொழில்களுக்கு உதவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடு அஞ்சுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவி வரும் பிரச்சினையை தீர்த்து, குடும்பத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த குறித்த இருவரும் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் அழகியுடனான உறவை நிறுத்திவிட்டு பணம் கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே அவருடன் மீண்டும் குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவதாக குடு அஞ்சுவின் மனைவி கூறியதாக அந்நாட்டு தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் யுவதியுடனான தனது உறவை நிறுத்த முடியாது என சிறையில் உள்ள அஞ்சு தெரிவித்துள்ளார்.
அஞ்சுவுக்கு டுபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, நலவாழ்வு மையம், உணவகம் மற்றும் கட்டிட வளாகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.