நேற்று இரவு பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கி உடமைகளுக்கு சேதம் விளைவித்த 5 பேரை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் குடித்துவிட்டு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் எடுப்பதற்காக வந்துள்ளனர்.
QR குறியீடு இல்லாததால் எரிபொருள் நிலைய ஊழியர் எரிபொருளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த கும்பல் ஊழியர்களை தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்