கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.
சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள் சமயத்தலைவர்கள், சித்தவைத்தியர்களை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட விசேட குழு ஒன்றையும் கிழக்கு ஆளுனர் அனுராதா யஹம்பத் நியமித்துள்ளார்.
இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் 50 இலட்சம் ரூபாவ ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுதேச வைத்தியசாலைக் குறைபாடுகளை அவதானித்து அவற்றை முன்னேற்ற தேவையான ஆலோசனைகளையும் வழங்குமாறும் குழுவை ஆளுனர் கேட்டுள்ளார்.