கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி, பளை முல்லையடி பகுதியில் (05-07-2023) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த சிறுவனை வேகமாக வந்த கப்ரக வாகனம் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்தை ஏற்படுத்திய சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்றைய தினம் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி முன்னிலையில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடபட்டுள்ளது.