கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முருகண்டிக்கும் இரணைமடு சந்திக்கும் இடையில் உள்ள ஏ9 வீதியில் நேற்றிரவு இரவு 10.30 மணியலவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு படுகாயமடைந்த பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியும் முருகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளிள் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.