வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டம் பளை பிரதேச முகமாலையில் இன்று (13) இடம்பெற்றிருந்தது.
வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி இன்று 74 ஆவது நாளாக முகமாலையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு கவுரவமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தி குறித்த அமைதி போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம்முகமாலை பிரதேசத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் இன்றைய தினம் இடம்பெற்றது.