கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.