கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உரிய வாழ்விட வசதிகளின்றி ஆயிரத்தும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக கொட்டகைகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மீள் குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு கடந்த 2018 ஆம் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எந்த வீட்டுக்கும் முழுமையான நிதி வழங்கப்படாது முதற் கட்ட இரண்டாம் கட்ட பகுதிக் கொடுப்பனவுகள் மாத்திரமே கிடைத்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.