அருகில் உள்ள கடைக்குச் சென்று அப்பளம் வாங்கி வருமாறு தாயார் தனது 5 வயது மகளுக்கு கூறியுள்ளார்.
எனவே 5 வயது சிறுமி அப்பளத்தை வாங்கி கொண்டு வரும் வழியில் ஒரு அப்பளத்தை பச்சையாக சாப்பிட்டு விட்டார். இதனால் கோபமுற்ற தாய் தனது மகளுக்கு தீயினால் சூடு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியில் தாத்தா அக்கராயன் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று (09) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமயம் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்