வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
29 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தனது 7வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரமும் குறித்த பெண், தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணைஅதிகாரி சுரேந்திர சேகரன் மேற்கொண்டார்.