கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திருடிய சந்தேகநபர் ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த முச்சக்கர வண்டி சான்றுப் பொருளாக பெயரிடப்பட்டு கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, கடந்த 9 ஆம் திகதி திருடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் அந்த வாகனத்தின் உரிமையாளர் எனவும், அவர் தன்னிடமிருந்த உதிரி சாவியை பயன்படுத்தி முச்சக்கரவண்டியை காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.