கால்பந்தாட்ட உலகின் இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் இந்த நூற்றாண்டில் முதல் முறையாக மோதுகின்றனர்.
இதற்கமைய 2023 ஜனவரியில் மெஸ்ஸி, ரொனால்டோ நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2023-ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களில் விளையாடுகிறார்கள்.
மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒரு வருடத்திற்கு நீட்டித்த நிலையில், ரொனால்டோ சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருடன் (Al Nassr) இரண்டரை வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனவரி 19 அன்று அல் நஸ்ர் மற்றும் அல் ஹிலாலின் ஒருங்கிணைந்த அணியுடன் விளையாட PSG சவுதி அரேபியாவுக்குச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இதேவேளை ஒரு மாத காலமாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அல் நஸ்ர், ரொனால்டோ அணியின் ஜெர்சியை உயர்த்திப்பிடிக்கும் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.