நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
காலை முதல் கிட்டத்தட்ட 220,000 பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின்வெட்டு பதிவாகியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ன்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.