அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மன்னார் காற்றாலை செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடைவிதித்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு எதிராக, மன்னார் மாவட்டம் மாத்திரமன்றி பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக தடை உத்தரவைப் பெறும் நோக்கில் பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், காற்றாலை செயற்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இனி இடம்பெறாது என பொலிஸார் நீதிமன்றத்திற்கு நேற்று உத்தரவாதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த காற்றாலைப் பாகங்களை மன்னார் நகருக்குள் அனுமதிக்கவும், காற்றாலை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

