காத்தான்குடியில் பல்வேறு வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திபடுத்தியுள்ளனர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதிவான் மூன்று நாட்கள் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.