ஹங்வெல்ல – தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவரது சடலம் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல, குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுமிகளும் ஒரு யுவதியும் நேற்று காணாமல் போயிந்தனர்.
14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளும் 29 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது