மொனராகலையில் பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடைக்கு அருகிலேயே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு விசாரணையில் இறந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (14) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படாவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.