தனது கள்ளக்காதலியை சந்திக்க சென்ற நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி ஹிதெல்லன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று அதிகாலை இரத்தினபுரி ஹிதெல்லன பகுதியில் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது
அதன் பிரகாரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று அந்த நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்த போதிலும் சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹிதெல்லன பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அவரை சந்திக்க சென்ற போது, குறித்த பெண்ணின் கணவன் அவரை தாக்கி, மரத்தில் கட்டி வைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது