களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி இன்று வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை, மோதரைவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார். கடந்த 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (18) அவர் உயிரிழந்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலும் வடக்கு களுத்துறை பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலகவின் அறிவுரைக்கு அமைய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4 நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.