கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் (07.03.2024) ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் (07.03.2024) ஆம் திகதிக்கு முன்னர் அவை உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.