நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.