கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தின் போது பாதிரியார்கள் சில தாக்கப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் சில அடாவடி கும்பல்களின் தாக்குதலால் இன்றைய தினம் யுத்தக் களமானது.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவித்துக் கொண்ட கும்பல் சிலர் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து அடித்து உடைத்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில பாதிக்கப்பட்ட 23இற்கும் அதிகமானோர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பாதிரியார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.