கருங்கோழி இறைச்சியானது நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இதனை , “கடக்நாத்’ என்றும் அழைப்பார்கள் .
இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது.
கருங்கோழி முட்டை
கருங்கோழி முட்டையானது கருங்கோழி போலவே கருப்பு நிறம் உடையது. கருங்கோழி ஆண்டிற்கு 120 முதல் 150 முட்டைகளை இடுவதால் இதனுடைய விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
கொழுப்புச்சத்து மற்றும் புரதம்
எல்லாம் நாட்டுக்கோழி போலவே இதிலும் நல்ல கொழுப்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது.
அமினோ அமிலங்கள்
இந்த முட்டையில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன எனவே இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது .
முட்டை சாப்பிடுவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும், ஆஸ்துமா தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அளவு குறைவு
கருங்கோழி முட்டைகள் கொலஸ்ட்ராலின் அளவு குறைவாக இருப்பதாலும் ,இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாலும் முதியோர் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக கருதப்படுகிறது.
மேலும் இதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது என்று கூறுகின்றனர்.
நரம்புகளை வலுப்படுத்தும்
இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் உள்ளது.
எனவே இதை உண்பதால் நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படும் என்றும் கூறுகின்றனர் .