இலங்கை கமட்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ராஜா கொல்லுரே கடந்த 24 ஆம் திகதி உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்திருந்தது.
வடமேல் மாகாண ஆளுநரான இவர் கடந்த தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் அக்கட்சியினால் எடுக்கப்பட்டிருந்தது.