கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக இளைஞர் ஒருவரிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த யாழ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரிடம் இருந்து 31 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும், இளைஞரை கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.