Canada (Grafton) இல் நேற்று 26.09.2021 மாலை நடைபெற்ற திருமண நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் இன்று ஒரேபாலின திருமணங்கள் நடைபெற்றுவந்தாலும் தமிழர்கள் மத்தியில் அந்த கலாச்சாரம் இடம் பெற்றது இதுவே முதற் தடவை.
இவ்வாறான நிலையிலேயே குறித்த திருமணமும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற இரண்டு பெண்களின் திருமணத்தை ஓர் அந்தணரே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். அத்துடன் அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.