இலங்கை மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற “சுப்ரமணியம்” கதிர்காம ஆலயத்தை சென்றடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையில் சுமார் 36 நாட்களுக்கும் மேலாக உடன் பயணித்த ‘சுப்ரமணியம்’ என்ற நாய் அனைவராலும் அதிசயத்துடன் பார்க்கப்பட்டதுடன் சமூகவலைத்தளங்க்களிலும் வைரலானது.
யாழ்பாணத்தில் தொடங்கி கதிர்காமம் வரை நீண்ட பயணம்
பட்டுத் துணி அணிவித்து, குங்குமம் பொட்டு வைத்து பக்தியுடன் அழைத்துச் செல்லப்பட்ட இந்த நாய் அசைவ உணவுகளை தவிர்த்து பக்தர்களுடன் நடந்து சென்றது. இந் நிலையில் பானமையில் இருந்து வாகனத்தில் ஏற்றி புறப்பட்ட நம் “சுப்ரமணியம்” , முருகப் பெருமானின் பேரருளால் தற்போது கதிர்காமத்தை நலமுடன் சென்று அடைந்துளளது.
யாழ்பாணத்தில் தொடங்கி கதிர்காமம் வரையிலான இந்த நீண்ட பயணம், பலரது கூட்டு முயற்சியாலும் எம்பெருமான் முருகனின் அருளாலும் எவ்வித தடையுமின்றி யாத்திரை குழுவினர் கதிர்காமத்தை சென்றடைதுள்ளனர்.
இந் நிலையில் “சுப்ரமணியம்” கதிர்காம பாத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளமை இணையவாசிகளுக்கு மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

