கண்ணீர் அஞ்சலி
அமரர் கந்தையா சண்முகநாதன் (ராயு)
கைல்புறோன் கந்தசாமி கோவில் (செயலாளர்)
புலம்பெயர் தேசங்களில் பல ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவே தாயக மக்களின் நலனுக்காகவும் உதவி வருகின்றன. அந்த வகையில் கைல்புறோன் கந்தசாமி ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், கல்வி, வாழ்வாதாரம் போன்ற பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றார்கள். அவற்றில் ஒன்றாக உதவும் இதயங்கள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மாலைநேர இலவசக் கல்விக்கு ஆசிரியர் ஊதியமாக மாதாந்தம் நிதி உதவி செய்து வருகிறார்கள். இதுபோன்ற நற்பணிகளை செயல்ப் படுத்துபவர்கள் இவ்வாலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள்.அவர்களில் ஒருவரான அந்த நல் உள்ளம் கொண்ட
அமரர் கந்தையா சண்முகநாதன் (ராயு) அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் கந்தசாமி கோவில் நிர்வாக உறுப்பினருக்கும் பக்தர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.