கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் , கிரிந்திவெல பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்