வெளிநாட்டுக்கு செல்லும் கணவரை வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் கிரிபத்கொட – உனுபிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், காரில் உள்ள பாதுகாப்பு பலூன் இயங்கியதில் காரை செலுத்திய அப்பெண்ணுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், காரின் பின் இருக்கையில் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.