ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்ட அழகான பெண்ணாக இருந்துள்ளார்.
எனினும், இவரது கணவர் யானாவிடம் கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறி வந்துள்ளதோடு அதற்காக பேசாமலும் இருந்துள்ளார்.
கணவனின் இந்த நடவடிக்கையால் யானா போப்ரோவா தனது உடல் எடையை குறைக்கும் நோக்கில் உணவு கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியையும் தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் தான் விரும்பிய உணவுகளை நன்றாக உண்டு வந்த யானா போப்ரோவா டயட் என்ற பெயரில் பிடித்த உணவுகளை தவிர்த்தார்.
எனினும், அவரது கன்னம் குண்டாக இருப்பதாகவே கணவர் கூறியமையால் யானா போப்ரோவா தீவிர டயட் உணவை கையில் எடுத்த பின்னர் உணவை உட்கொள்வது பட்டினி கிடந்து உடல் எடையை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
இதனால் நீண்டநாட்களாக அவர் சரியாக உணவு உட்கொள்ளாது பட்டினி கிடந்தமையால் எலும்பும், தோலுமாக மாறியுள்ளார்.
இவ்வாறான சூழலில்,ஷோ நிகழ்ச்சி ஓமரில் பங்கேற்ற யானா போப்ரோவா ஆள் அடையாளம் வகையில் மாறியிருந்தமை அனைவரிடமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.