கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றிக்கொண்டிருந்த கொள்கலன் ஒன்று 2ஆம் இலக்க விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தை சுற்றி பலத்த காற்று வீசியபோதிலும் விமான நிலைய நடத்துநர்கள் முறையாக பிரேக் போடாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து விபத்துக்குள்ளான துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் இன்னும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.