அரச வைத்தியசாலைகளில் கட்டண வார்டுகள் வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண வார்டுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொடுப்பனவுகள் தொடர்பாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் கட்டணச் சிகிச்சை பிரிவு வசதிகளை விஸ்தரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.