இன்று (8) நண்பகல் 12 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் கடமையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக தமக்கான போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் எச்சரித்திருந்தது.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதுடன் சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.