கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை எனவும். ஏனெனில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் ஜனாதிபதி அண்மையில் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்தார். வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றிருந்தார். ஜனாதிபதி கச்சத்தீவுக்கு விஜயம் செய்தமை விசேட விடயமல்ல.
தற்போது தென்னிந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் குழுக்கள் தங்கள் அரசியல் லாபத்தினை இலக்காகக் கொண்டு கச்சத்தீவு விவகாரத்தினை கருவியாக பயன்படுத்துகின்றனர்.
கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை. ஏனெனில் கச்சத்தீவு எமக்கு சொந்தமானது” இவ்வாறு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

