நீர்கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட பாடசாலை ஆசிரியரின் ஒழுக்கம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை அவசியமில்லை என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் சுற்றறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது சிறுவர்களுடன் இணைந்து பெண் ஆசிரியை நடனமாடியது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், அது ஆசிரியர் – மாணவர் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.