வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் 08.07.21 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில்
ஆலயத் திருவிழா பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான குருக்கள் ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவிழாவில் கலந்துகொள்ளும் குருக்கள்,நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 பேருக்கும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் ஒன்று கூடிய வர்களுக்கும் கடந்த 07.07.21 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்னிலையில் அதன் முடிவுகள் நேற்று 08.07.21 இரவு வெளியாகியுள்ளது. இதில்
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கமநல சேவை நிலையத்தில் ஒன்று கூடிய வர்களில் பழம்பாசி பகுதியினை சேர்ந்த ஒருவருக்கும்,ஒட்டுசுட்டான் ஆலய குருக்கள் ஒருவருமே தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.